Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/06/image-6.png

அமலாக்கத்துறை என்றால் என்ன? | What is Enforcement Directorate

Spread the love

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறை(Directorate General of Economic Enforcement or Enforcement Directorate [ED]) என்றால் என்ன என்பது குறித்தும், அதன் அதிகார வரம்புகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/06/image-6.png

அமலாக்கத்துறை பொருளாதாரச் சட்டத்தை அமல்படுத்துவது பொருளாதாரக் குற்றத்தைத் தடுப்பது  போன்றவை ஆகும். இந்திய அரசு வகுத்துள்ள பொருளாதாரச் சட்டத்தை அமல்படுத்துவதால்  இந்த துறை அமலாக்கத்துறை என்று அழைக்கப்படுகிறது.

செயல்பாடு:

சம்மன் அனுப்புதல், சோதனையிடுதல், சொத்துக்களை முடக்குதல், பறிமுதல் செய்தல், கைது செய்தல் ஆகிய அதிகாரங்கள், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறைக்கு உள்ளதாக உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமலாக்கப் பிரிவு இயக்குனரகத்தின் முதன்மையான இரண்டு பணிகள், 

வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை மேலாண்மைச் சட்டம் (Foreign Exchange Management Act 1999 (FEMA), 

மற்றும் கணக்கில் வராத பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதை தடுக்கும் சட்டம், 2002 Prevention of Money Laundering Act, 2002(PMLA) 

ஆகிய இரண்டு சட்டங்களை அமல் படுத்துவதும், நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிப்பதேயாகும்.

அமைப்பு:

தலைமை இயக்குநர் ஒருவர் தலைமையில், அமலாக்கப்பிரிவின் தலைமையிடம் புதுதில்லியிலும், இதன் பத்து மண்டல அலுவலகங்கள், மண்டல இயக்குனர்களின் தலைமையில் 

தலைமையகம்:

மும்பை, 

கொல்கத்தா, 

சண்டிகர், 

சென்னை, 

அகமதாபாத், 

பெங்களூரு, 

கொச்சி மற்றும் 

ஹைதராபாத் நகரங்களில் செயல்படுகிறது. அமலாக்க இயக்குனரகத்தின் துணை மண்டல அலுவலகங்கள், இணை இயக்குனர்களின் தலைமையில், ஆக்ரா, ஸ்ரீநகர், ஜெய்ப்பூர், வாரணாசி, ஹைதராபாத், குவகாத்தி, மற்றும் பனாஜிஆகிய இடங்களில் செயல்படுகிறது.


Spread the love

Related Posts