தமிழக வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – இன்றைய பெட்ரோல், டீசல் விலை வெளியீடு!
இந்தியாவில் 509 வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை:
இந்தியாவில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றை பொறுத்தே உள்நாட்டில் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு திடீரென வாகன ஓட்டுகள் எதிர்பாராத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதாவது, பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 110. 82 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 102.51 ஆகவும் உயர்த்தப்பட்டது.
இதன் பின்னர், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 9 குறைந்து ரூ. 102.63 க்கும், டீசல் லிட்டருக்கு ரூ. 7.50 குறைந்து ரூ. 94.20 க்கும் நிர்ணயம் செய்யப்பட்டது.
இதன் பின்னர், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இன்று பெட்ரோல், டீசல் விலை 509 ஆவது நாளாக எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ. 94.24 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால், இந்தியாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படலாம் எனவும் ஒரு தரப்பில் கூறப்பட்டு வருகிறது.