கோவை சமூக பாதுகாப்புத்துறை (TNSCPS) வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசிநாள் 17 August 2021

Spread the love

தயவுசெய்து இந்த செய்தியை கீழே உள்ள சோஷியல் மீடியா ஐகான்களை கிளிக் செய்து அனைவருக்கும் ஷேர் செய்து யாரேனும் ஒருவரின் வாழ்வில் ஒளி விளக்கேற்றுங்கள் ப்ளீஸ்..

முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

Exams Guru examsguru

வேலை வகை: தமிழக அரசு

விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்

2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நல குழுக்களுக்கு தலைவர் (ம) உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிட்டுள்ள தகுதிகளை கொண்ட தகுதி வாய்ந்த
நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குழந்தைகள் நல குழுவிற்கு ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில்
நியமிக்கப்பட உள்ளனர்.

குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித மேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் நியமனம் செய்யப்படும்போது 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்களாவர். ஆனால் தொடர்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது.

இதற்கான விண்ணப்ப படிவத்தை நமது இணையதளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 17.08.2021 அன்று மாலை 5 மணிக்குள் கீழ்கண்ட முகவரியில் கிடைக்கப் பெறுமாறு அனுப்பிவைத்திட தெரிவிக்கப்படுகிறது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
2வது தளம், பழைய கட்டிடம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
கோயம்புத்தூர். 641 018.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.

மேலும் விபரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், 2வது தளம், பழைய
கட்டிடம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோயம்புத்தூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0422
– 2300305 ஆகிய எண்களுக்கும் தொடர்பு கொள்ளலாம்.

விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய: Click Here


Spread the love

Related Posts