Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2022/03/InShot_20220325_180435269-scaled.jpg

tnpsc general important questions | Test-21

Spread the love

1. நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல் என்று பாடியவர்?

விடை:  பாரதியார்

2. வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம் எனும் வரிகள் இயற்றியது யார்?

விடை:  தாராபாரதி

3. “தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம் இல்லாத பறவை” இது யார் கூற்று?

விடை:  ரசூல் கம்சதேவ்

4. தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் யார்?

விடை: வெ. ராமலிங்கனார்

5. “உலகில் நாகரிக முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியம் இருந்தால் போதும் மீண்டும் அதனை புதுப்பித்து விடலாம்” என்று கூறியவர் யார்?

விடை:  கால்டுவெல்

6. குயில், முல்லை போன்ற இதழ்களை நடத்தியவர் யார்/

விடை:  பாரதிதாசன்

7. தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் என்று அழைக்கப்படுபவர் யார்?

விடை: வாணிதாசன் 

8. பொங்கல் பரிசு எனும் நூலை இயற்றியவர் யார்?

விடை:  வாணிதாசன் 

9. கண்ணகி புரட்சிக் காப்பியம் என மூளை இயற்றியது?

விடை:  பாரதிதாசன்

10. “அர்த்தமுள்ள இந்து மதம்” எனும் நூலை இயற்றியவர் யார்?

விடை:  கண்ணதாசன் 

11. மலைக்கள்ளன் எனும் நாவலை இயற்றியது யார்?

விடை: நாமக்கல் கவிஞர் வெ ராமலிங்கம்

12. உவமை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?

விடை:  சுரதா

13. சாபவிமோசனம் எனும் நூலை இயற்றியது யார்?

விடை: புதுமைப்பித்தன் 

14. “ஆகாயத்துக்கு அடுத்த வீடு” என்ற சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூலை இயற்றியது யார்?

விடை: மு. மேத்தா

15. “பொங்கல் பரிசு” எனும் நூலை இயற்றியது யார்?

விடை: வாணிதாசன்

16. “பொங்கல் வழிபாடு” எனும் நூலை இயற்றியது யார்?

விடை: நா பிச்சமூர்த்தி

17. ஒரு மொழியில் உணர்த்தப்பட்டது வேறு ஒரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்றவர் யார்?     

விடை: மணவை முஸ்தபா

18. உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பு ஒரு காரணமாகும் என்கின்றனர்?  

விடை:  மூ கு ஜெகநாத ராஜா

19. சென்றிடுவீர் எட்டு திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்?

விடை: பாரதியார்

20. சிலம்பு செல்வர் என்று அழைக்கப்படுபவர் யார்?

விடை: மா.பொ.சி

21. தமிழரசுக் கழகத்தை தொடங்கியவர்

விடை: மா பொ சிவஞானம்

22. மா பொ சிவஞானம் அவர்கள் இயற்றிய எந்த நூலுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது?

விடை: வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

23. காளைகளின் பாய்ச்சல் பற்றி குறிப்பிடும் நூல்?

விடை:  கலித்தொகை

24. இந்திரவிழா பற்றி குறிப்பிடும் நூல்?

விடை:சிலப்பதிகாரம், மணிமேகலை

25. வாழ்வில் உயர நினைப்பவர்………..செயல்களை புறம் தள்ள வேண்டும்.

விடை: புகழைக் கெடுக்கும்


Spread the love

Related Posts