TNPSC 7th Tamil Important Question and Answer Part – 2

Spread the love

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2022 குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 தேர்வில் கேட்கப்படும் முக்கியமான பொது அறிவு கேள்வி மற்றும் பதில்கள்.

இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும் அது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”

TNPSC General Tamil Questions and Answer PDF(NEW Book)

1. காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?

விடை: நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்

2. “கத்தி யின்றி இரத்த மின்றி

    யுத்த மொன்று வருகுது 

    சத்தி யத்தின் நித்தி யத்தை…”

என்ற பாடலை இயற்றியது யார்?

விடை: நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கனார்

3. நெறி என்னும் சொல்லின் பொருள்

 விடை: வழி

4. பகைவரை வென்றதை பாடுவது _____ இலக்கியம்

விடை: பரணி

5. அதிமதுரம் சொல்லின் பொருள் யாது?

விடை: மிகுந்த சுவை

6. சுரதாவின் இயற்பெயர் என்ன?

விடை: ராஜகோபாலன்

7. சுப்புரத்தினதாசன் என தன் பெயரை மாற்றிக் கொண்டவர் யார்?

விடை: சுரதா

8. உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?

விடை: சுரதா

9. “சுத்தத் தியாகி” என தந்தை பெரியாரால் பாராட்டப் பெற்றவர் யார்?

விடை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

10. நேதாஜி என்னும் வார இதழை நடத்தியவர் யார்?

விடை: முத்துராமலிங்க தேவர்

11. இவரது பேச்சு சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது என்று அறிஞர் அண்ணா புகழ்ந்தவர் யார்?

விடை: முத்துராமலிங்க தேவர்

12. தேசியம் காத்த செம்மல் என பசும்பொன் முத்துராமலிங்க தேவரை பாடியவர் யார்?

விடை: திரு வி கா

13. சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என்று கூறியவர்?

விடை: பால கங்காதர திலகர்


,

Spread the love

Related Posts