Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/01/tnpsc-logo.png

ரூ.2.1 லட்சம் வரை சம்பளம்.. | TNPSC புதிய வேலைவாய்ப்பு | அரசு நூலகர் பணியிடங்களுக்கான காலியிடங்கள்

Spread the love

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது அரசு கல்லூரி, அலுவலக நூலகங்கள் மற்றும் அரசு நூலகங்களில் காலியாக உள்ள நூலகர் மற்றும் தகவல் அலுவலர் பணியிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் நேரடி நியமனத்தில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளனர்.
Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/01/tnpsc-logo.png
இந்த அறிவிப்பில் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் பணிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பணிகளும் இடம்பெற்றுள்ளன. 
ஒருங்கிணைந்த நூலக பணிகள் இணைத்து மொத்தம் 35 காலிப்பணியிடங்கள் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.
பணியின் விவரங்கள்:
1. நேர்முகத் தேர்விற்கான பதவிகள்: 
பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
கல்லூரி நூலகர் (அரசு சட்டக் கல்லூரி)8ரூ.57,700 – 2,11,500/-
நூலகர் மற்றும் தகவல் அலுவலகர்(அண்ணா நூற்றாண்டு நூலகம்)1ரூ.56,100 – 2,05,700/-
மாவட்ட நூலக அலுவலகர்3ரூ.56,100 – 2,05,700/-

2. நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
நூலக உதவியாளர்(தலைமைச் செயலக நூலகம்)2ரூ.34,400 – 1,30,400/-
நூலகர் மற்றும் தகவல் உதவியாளர் நிலை-2 (கலைஞர் நினைவு நூலகம் மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகம்)21ரூ.19,500 – 71,900/-

வயது வரம்பு :

இப்பணியிடங்களுக்கு SC,SC(A),ST,MBC/DC,BC(OBCM),BCM/DestituteWidows பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. 

இதர பிரிவினருக்கு 32 வயது முதல் 59 வயது வரை வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் விவரம்:
பதவிவயது
கல்லூரி நூலகர்59
நூலகர் மற்றும் தகவல் அலுவலர்37
நூலக உதவியாளர்37
நூலகர் மற்றும் தகவல் உதவியாளர் நிலை 232

கல்வித்தகுதி:

1. கல்லூரி நூலகர் : Library Science or Information Science or Documentation Science அல்லது அதற்கு நிகரான முதுகலைப் பட்டம். ஒரு வருட Post Graduate diploma in Library Automation and Networking அல்லது 1 வருட அனுபவம். NET தேர்வு தேர்ச்சி அல்லது Ph.D பெற்றிருக்க வேண்டும்.

2. நூலகர் மற்றும் தகவல் அலுவலர் :  ஏதேனும் ஒரு முதுகலைப் பட்டம் /Library Science/Library and Information Science பாடத்தில் முதுகலைப் பட்டம். 5 வருட அனுபவம் தேவை.

3. மாவட்ட நூலக அலுவலர் : ஏதேனும் ஒரு முதுகலைப் பட்டம் / Library Science/Library and Information Science பாடத்தில் முதுகலைப் பட்டம். 3 வருட அனுபவம் தேவை.

4. நூலக உதவியாளர் : டிகிரி / Library Science/Library and Information Science பாடத்தில் டிகிரி

5. நூலகர் மற்றும் தகவல் உதவியாளர் நிலை 2 : ஏதேனும் ஒரு டிகிரி / Library Science/Library and Information Science பாடத்தில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணியிடங்களுக்குக் கணினி வழி எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.  

மேலும் குறிப்பிட்ட பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற டிஎன்பிஎஸ்சி இணையத்தளத்தில் ஆன்லைனில் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். 

கட்டண விவரங்கள்:

பதிவு கட்டணமாக ரூ.150 மற்றும் தேர்வு கட்டணமாக நேர்முகத்தேர்வு பதவிகளுக்கு ரூ.200 மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு ரூ.100 செலுத்த வேண்டும்.


அதிகாரப்பூர்வ இணைய தளம்: CLICK HERE 

இந்த பணிக்கு விண்ணப்பிக்க: CLICK HERE 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: CLICK HERE 



Spread the love

Related Posts