TNPSC Important Question and Answer keys(Test-07)

Spread the love

1. மக்கள் நதிக்கரையில் குடியேற காரணம் என்ன?
வளமான மண்(1)
போக்குவரத்துக்கு ஏற்ற வழிகளாக இருந்தன(2)
a) 1
b) 2
c) 1 & 2
d) அனைத்தும்

Exams Guru examsguru

2. ஹரப்பா நாகரிகத்தின் இடிபாடுகளை பற்றி முதன் முதலில் தன்னுடைய நூலில் குறிப்பிட்டவர் யார்?
a) ஜான் மார்ஷல்
b) சார்லஸ் மேசன்
c) அலெக்சாண்டர் கன்னிங்காம்
d) ஜான் சார்லஸ்

3. கீழ்க்கண்டவற்றுள் ஹரப்பா இருந்ததற்கான முதல் வரலாற்று ஆதாரம் எது?
a) பாழடைந்த செங்கற்கோட்டை
b) பாழடைந்த குகைக் கோயில்
c) பாழடைந்த பளிங்கு கோட்டை
d) பாழடைந்த மண் கோட்ட

4. 1856 ல் எந்த இரண்டு நகரங்களுக்கிடையில் ரயில் பாதை அமைக்கும் போது சுட்ட செங்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன?
a) கன்னுஜ் மற்றும் குவாலியர்
b) பாட்னா மற்றும் உஜ்ஜெயின்
c) ஆக்ரா மற்றும் வாரணாசி
d) லாகூர் மற்றும் கராச்சி

5. நாகரீகம் என்ற வார்த்தை எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
a) கிரேக்கம்
b) இலத்தீன்
c) ஆங்கிலம்
d) அரபு

6. கீழ்க்கண்டவற்றுள் மிகப் பழமையான நாகரீகம் எது?
1.ஹரப்பா 2. மொகஞ்சதாரோ
a) 1
b) 2
c) 1 & 2
d) எதுவும் இல்லை

7. எந்த ஆண்டில் இந்திய தொல்லியல் துறை நிறுவப்பட்டது?
a) 1845
b) 1896
c) 1861
d) 1876

8. சிந்துவெளி நாகரிகத்தில் நகரத்தின் மேற்கு பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a) பெருங்குளம்
b) தானியக் களஞ்சியம்
c) கோட்டை
d) பொதுமக்கள் வசிக்கும் இடம்


9. ஹரப்பா நகரில் பொது மக்கள் வசிக்கும் இடம் எது?
a) கோட்டை
b) மேல் நகர அமைப்பு
c) மைய நகர அமைப்பு
d) கீழ் நகர அமைப்பு

10. மெஹெர்கர் எந்த ஆற்று பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது?
a) போலன்
b) கைபர்
c) டூன்
d) சம்பல்

11. ஹரப்பா நாகரீக தெருக்கள் எந்த வடிவமைப்பை கொண்டிருந்தன?
a) சட்டகம்
b) முக்கோணம்
c) சதுரம்
d) வட்டம்

12. கீழ்கண்ட எந்த இடத்தில் தானியக்களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
a) காலிபங்கன்
b) லோத்தல்
c) ராகிகர்கி
d) அம்ரி

13. மொகஞ்சதாரோவில் இருந்த இன்னொரு மிகப்பெரிய பொது கட்டிடமான கூட்ட அரங்கு எத்தனை தூண்களை கொண்டிருந்தது?
a) 10
b) 20
c) 30
d) 40

14. சிந்துவெளியின் எந்த பகுதியில் கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் கண்டுபிடிக்கப்பட்டது?
a) லோத்தல்
b) காலிபங்கன்
c) அம்ரி
d) கோட் டிஜி

15. அமர்ந்த நிலையில் உள்ள ஓர் ஆண் சிலை சிந்து வெளிப் பகுதியின் எந்த பகுதியில் காணப்படுகிறது?
a) ஹரப்பா
b) லோத்தல்
c) மொஹஞ்சதாரோ
d) காலிபங்கன்

16. குஜராத் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட _____ அளவுகோல் 1704 மி.மீ வரை சிறிய அளவீடுகளை கொண்டிருந்தது?
a) தங்கம்
b) தகரம்
c) செம்பு
d) தந்தம்

17. மனிதர்களால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம் எது?
a) செம்பு
b) இரும்பு
c) தங்கம்
d) வெண்கலம்

18. மொஹஞ்சதாரோவில் _____ ஆல் ஆன சிறிய பெண்சிலை கிடைத்தது.
a) இரும்பு
b) வெண்கலம்
c) செம்பு
d) வெள்ளி

19. காவிரி வாலா என்ற தமிழ் பெயரால் அழைக்கப்படும் ஆறு எங்கு காணப்படுகிறது?
a) ஆப்கானிஸ்தான்
b) பர்மா
c) பாகிஸ்தான்
d) சீனா

20. சிந்துவெளி நாகரீகத்தில் மண்பாண்டங்கள் எந்த நிறத்தில் இருந்தன?
a) சிவப்பு
b) கருப்பு
c) பச்சை
d) நீலம்
21. ஹரப்பா நாகரீகம் எந்த ஆண்டு முதல் சரிய தொடங்கியது?
a) பொ.ஆ.மு 1900
b) பொ.ஆ.மு 1850
c) பொ.ஆ.மு 1800
d) பொ.ஆ.மு 1750

22. உலகின் பழமையான 4 நாகரீகங்களில் மிகப் பெரிய பரப்பளவு கொண்டது எது?
a) சீன நாகரிகம்
b) மெசபடோமிய நாகரீகம்
c) எகிப்து நாகரிகம்
d) சிந்துவெளி நாகரிகம்

23. முதல் எழுத்து வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது?
a) எகிப்தியர்கள்
b) சுமேரியர்கள்
c) கிரேக்கர்கள்
d) சீனர்கள்

Answer Keys:

0102030405060708091011121314151617181920212223
DBCCAAAABBDDAABBDCDDAAB

Spread the love