TNPSC குரூப் 5- A (தலைமை செயலக பணி ) உதவிப் பிரிவு அலுவலர் / உதவியாளர் பதவிக்களுக்கான காலிப்பணியிடங்களைப் பணி மாறுதல் மூலம் நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 21.09.2022 அன்று வரை இணைய வழி மூலம் தமிழ்நாடு அமைச்சுப் பணி / தமிழ்நாடு நீதி அமைச்சகப் பணியில் பணிபுரியும் தகுதி வாய்ந்த உதவியாளர் / இளநிலை உதவியாளர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் பதிவுக்கட்டணமாக ரூ.150/-செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை இணையவழி நிரந்தரப்பதிவு மூலமாக (OTR)
கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இந்த நிரந்தர பதிவு முறையில் பதிவு செய்த விண்ணப்பங்கள் பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலங்களுக்கு செல்லத்தக்கதாகும்.
அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஒரு முறைப் பதிவானது எந்த ஒரு பதவிக்கான
விண்ணப்பமாக கருதப்படமாட்டாது.
விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் தனித்தனியே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஒரு முறைப் பதிவுக்கான பதிவுக் கட்டணம் இந்த நியமனத்திற்கான விண்ணப்பம்/தேர்வுக் கட்டணம் அல்ல. விண்ணப்பதாரர்கள்
இத்தேர்வுக்கான நிர்ணயிக்கப்பட்ட தேர்வுக் கட்டணத்தைத் தனியே செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய ஒரு முறைப்
பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.
காலிப் பணியிடங்கள்:
உதவிப் பிரிவு அலுவலர் (சட்டம் மற்றும் நிதித் துறை தவிர), உதவிப் பிரிவு அலுவலர், தலைமைச் செயலகம் (நிதித் துறை), உதவியாளர்,
தலைமைச் செயலகம் (சட்டம் மற்றும் நிதித் துறை தவிர), உதவியாளர், தலைமைச் செயலகம் (நிதித் துறை) ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
சம்பளம் மாதம் ரூ.20,000-க்கும் மேல் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை :
எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர் பெற்ற மொத்த மதிப்பெண்கள் மற்றும் பணி நியமனங்களுக்கான இடஒதுக்கீடு விதி ஆகியவற்றின் அடிப்படையில் (தனித்தனியே ஒவ்வொரு பதவிக்கும் பொருந்தும்) தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களின் பட்டியல் தேர்வாணைய வலைத்தளத்தில் வெளியிடப்படும்.
ஏற்கனவே விண்ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்த சான்றிதழ்களைச் சரிபார்த்த பின்னர் அசல் சான்றிதழ்களைச் சரிபார்க்கும் பொருட்டு விண்ணப்பதாரர்கள்
அழைக்கப்படுவர், பின்னர் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
கடைசி தேதி:
இணையவழியில் விண்ணப்பிக்க கடைசி தேதி
21.09.2022. விண்ணப்பத்தை திருத்தம் செய்வதற்கான காலம் 26.09.2022 நள்ளிரவு 12.01 முதல் 28.09.2022 இரவு 11.59 மணி வரை திருத்தலாம்.
நியமன அலுவலரிடம் இருந்து பெறப்படும் சான்றிதழ் மற்றும் தடையின்மைச் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இறுதி நாள் 06.12.2022.
எழுத்துத் தேர்வு சென்னை (0101) தேர்வு மையத்தில் மட்டுமே நடைபெறும். காலை 18.12.2022 அன்று காலை 9.30 மணி
முதல் 12.30 மணி வரை பொதுத் தமிழ் தேர்வும், பொது ஆங்கிலாம் அன்றைய தினம் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
தகுதிகள்:
வயது வரம்பு 01.07.2022 அன்றுள்ளபடி உதவிப் பிரிவு அலுவலர், தலைமைச் செயலகம் மற்றும் உதவிப் பிரிவு அலுவலர், தலைமைச் செயலகம் பதவிகளுக்கு
ஆதி திராவிடர், ஆதி திராவிடர் (அருந்ததியர்) மற்றும் பட்டியல் பழங்குடியினர் அதிகபட்ச வயது 40 வயது நிறைவடைந்தவராக இருத்தல் கூடாது.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர் மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர் அல்லாதவர்) மற்றும்
பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர் 35 வயது நிறைவடைந்தவராக இருத்தல் கூடாது.
கல்வித் தகுதி:
கல்வித் தகுதி 23.08.2022 அன்றுள்ளபடி மற்றும் தகுதியான பணிக்காலம் 01.08.2022 அன்றுள்ளபடி விண்ணப்பதாரர்கள்
கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதியினை அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியினைப் பெற்றிருக்க வேண்டும்.
உதவி பிரிவு அலுவலருக்கு ஒரு இளநிலை பட்டப்படிப்பு, உதவி பிரிவு அலுவலருக்கு வர்த்தகத்தில் இளநிலை பட்டப்படிப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள Click Here
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |
Apply Now | Click Here |
Telegram group | Click Here |
Whats App | Click Here |