Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2022/07/tnpsc-logo-png.png

TNPSC Group-1 தேர்வு தேதி மாற்றம் – TNPSC Important Announcements🤫

Spread the love

TNPSC – தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 1 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவான examsguru.in மூலம் அறிந்து கொள்ளலாம்.

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2022/07/tnpsc-logo-png.png

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 1 (TNPSC Group -1)ல் அடங்கிய பணிகளுக்கான முதல்நிலைத் எழுத்துத் தேர்வுக்கான(Preliminary Exam) அறிவிப்பானது ஜூலை மாதம் வெளியானது. இந்த குரூப் 1 தேர்வின் மூலம் தமிழகம் முழுவதும் 92 பணியிடங்கள் நிரப்பட உள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வணிகவியல், பொருளாதாரம், சமூகவியல் போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கு சில பதவிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2022/07/tnpsc-logo-png.png

தற்போது இந்த அறிவிப்பில் டிஎன்பிஎஸ்சி முதல் நிலைத் தேர்வின் தேதியை மாற்றம் செய்துள்ளது.

இந்த பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வு 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். இதில் 175 வினாக்கள் பொது அறிவு பகுதிகளில் இருந்தும், 25 வினாக்கள் கணிதப் பகுதியிலிருந்தும் கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

இந்த முதல்நிலைத் தேர்வு 30.10.2022 முற்பகல் அன்று நடைபெற உள்ளதாக, TNPSC சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது இந்த முதல்நிலைத் தேர்வுகள் சில நிர்வாக காரணங்களால் வருகின்ற 19.11.2022 முற்பகல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் ஒரு சிலர் இதனை வரவேற்றும் ஒரு சிலர் மாற்றத்திற்கு கவலைகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Check Official Announcements


இது போன்ற முக்கியமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள whatsapp மற்றும் telegram குரூப்பில் இணைந்து கொள்ளவும்.

இந்த செய்தியை உங்களுடைய நண்பர்களுக்கும் பயனுள்ளதாக மாற்ற அவர்களுக்கும் இந்த செய்தியை பகிரவும்.


Spread the love

Related Posts