1. தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ மன்றம் யாரை பாராட்டி பட்டம் வழங்கி சிறப்பித்தது?
விடை: தந்தை பெரியார்
2. விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம்?
விடை: சீவக சிந்தாமணி

3. இந்தியாவில் பேசப்படும் மொழிகள் எத்தனை குடும்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளன?
a) இரண்டு
b) மூன்று
c) நான்கு
d) ஐந்து
விடை: மூன்று
4. இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை ______க்கும் மேற்பட்டது.
விடை: 1300
5. இந்திய நாடு மொழிகளின் காட்சிசாலையாக நிகழ்கின்றது என்று கூறியவர் யார்?
விடை: சா. அகத்தியலிங்கம்
6. திராவிடம் என்னும் சொல்லை முதன் முதலில் குறிப்பிட்டவர்
விடை: குமாரிலபட்டர்
7. திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை?
விடை: இருபத்தி எட்டு(28)
8. “தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனி குடும்பத்திற்கு உரிய மொழி சமஸ்கிருத கலப்பின்றி அது தனித்து இயங்கும் ஆற்றல் பெற்ற மொழி தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிக்கும் தொடர்பு இருக்கலாம்” இது யாருடைய கூற்று?
விடை: கால்டுவெல்
9. எந்த இரு நாடுகளின் பண தாள்களில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது?
விடை: மொரீஷியஸ், இலங்கை
10. தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள் எவை?
இலங்கை சிங்கப்பூர்
11. உலகத் தாய்மொழி நாள் என்று கொண்டாடப்படுகிறது?
விடை: பிப்ரவரி 21
12. நவரசம் :
விடை: வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், கோபம், நகை, சமநிலை.
முதலிய ஒன்பது
13. “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” என்று இயற்கையை வாழ்த்திப் பாடியவர் யார்?
விடை: இளங்கோவடிகள்
14. இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்படுபவர் யார்?
விடை: சர் ஆர்தர் காட்டன்
15. கல்லணைக்கு கிரான்ட் அணைக்கட்டு என்ற பெயரைச் சூட்டியவர் யார்?
விடை: சர் ஆர்தர் காட்டன்
16. பெரியபுராணத்தை இயற்றியது யார்?
விடை: சேக்கிழார்
17. “பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவி வலவ” என்று சேக்கிழாரை புகழ்ந்தவர் யார்?
விடை: மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
18. நாலடி நானூறு, வேளாண் வேதம் என்று அழைக்கப்படும் நூல் எது?
விடை: நாலடியார்
19. நெறி என்னும் சொல்லின் பொருள்
விடை: வழி
20. பகைவரை வெற்றி கொண்டவரை பாடப்பாடும் இலக்கியம்
விடை: பரணி
21. பகுத்தறிவுக் கவிஞர் என்று புகழப்படுபவர் யார்
விடை: உடுமலை நாராயணகவி
22. ஒலியின் வரிவடிவம் ……… ஆகும்
விடை: எழுத்து
23. பேச்சு மொழியை……. வழக்கு என்று கூறுவர்
விடை: உலக
24. இராவண காவியத்தின் ஆசிரியர் யார்?
விடை: புலவர் குழந்தை
25. இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர்?
விடை: விக்ரம் சாராபாய்
26. இந்திய ஏவுகணை நாயகன் என்று போற்றப்படுபவர் யார்?
விடை: டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம்
27. இளைய கலாம் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் யார்?
விடை: மயில்சாமி அண்ணாதுரை
28. யார் தமது அறிவியல் அனுபவங்களை “கையருகே நிலா” எனும் நூலாக எழுதியவர் யார்?
விடை: மயில்சாமி அண்ணாதுரை
29. சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள் ______ என்று அழைக்கப்பட்டனர்
விடை: கண்ணெழுத்துக்கள்
30. தமிழ் எழுத்துக்களில் மிகப்பெரும் சீர்திருத்தத்தை செய்தவர் யார்?
விடை: வீரமாமுனிவர்
31. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது யாருடைய கூற்று?
விடை: தொல்காப்பியர்
32. ஆயுத எழுத்து பிறக்கும் இடம்____?
விடை: தலை
33. தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: வாணிதாசன்
34. அரங்கசாமி என்கின்ற எத்திராசலு என்பது யாருடைய இயற்பெயர்?
விடை: வாணிதாசன்
35.”தமிழ்நாட்டின் ஹாலந்து” என்று சிறப்பிக்கப்படும் ஊர் எது?
விடை: திண்டுக்கல்