தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2022 குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 தேர்வில் கேட்கப்படும் முக்கியமான கேள்வி மற்றும் பதில்கள்.
இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும் அது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”

TNPSC General Tamil Questions and Answer PDF
1. திருவருட்பிரகாச வள்ளலார் எனும் சிறப்புப் பெயர் பெற்றவர் யார்?
விடை: ராமலிங்க அடிகளார்.
2. யாருடைய பாடல்கள் அனைத்தும் “திருவருட்பா” என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
a) தாயுமானவர்
b) ராமலிங்க அடிகளார்
c) பாரதியார்
d) குணங்குடி மஸ்தான் சாகிபு
விடை: b
3. ராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் எது?
a) திருமறைக்காடு
b) மருதூர்
c) வில்லியனூர்
d) எட்டயபுரம்
விடை: b
4. செந்நாப்போதார், தெய்வப் புலவர், நாயனார், தேவர், பொய்யில் புலவர் எனும் பெயர்களால் அழைக்கப்படுபவர் யார்?
விடை: திருவள்ளுவர்
5. திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுவது?
விடை: கிமு 31.
6. திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எத்தனை?
விடை: 133
7. திருக்குறளில் ஒரு அதிகாரத்திற்கு எத்தனை குறட்பாக்கள் உள்ளன?
விடை: 10 குறள்கள்
8. திருக்குறளில் மொத்தம் எத்தனை குறட்பாக்கள் உள்ளது.
விடை: 1330
9. முப்பால், உலகப் பொதுமறை, தமிழ்மறை, வாயுறை வாழ்த்து என்று போற்றப்படும் நூல் எது?
a) பகவத் கீதை
b) திருக்குறள்
c) குர்ஆன்
d) பைபிள்
விடை: b
10. 2022ஆம் ஆண்டில் திருவள்ளுவர் ஆண்டு என்ன?
விடை: 2053
11. திருக்குறள் _________ நூல்களில் ஒன்று?
a) பத்துப்பாட்டு
b) எட்டுத்தொகை
c) பதினெண்கீழ்க்கணக்கு
d) சிலப்பதிகாரம்
விடை: c
12.குறிஞ்சிப்பாட்டு நூலின் ஆசிரியர் யார்?
a) கபிலர்
b) கம்பர்
c) தாயுமானவர்
d) பாரதியார்
விடை: a
13. சரஸ்வதி நூலகம் அமைந்துள்ள மாவட்டம் எது?
a) சென்னை
b) கோவை
c) திருச்சி
d) தஞ்சாவூர்
விடை: d
14. உவேசா அவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகம் எந்த தலைப்பில் நூலாக வெளிவந்தது?
a) என் சரிதம்
b) என் வாழ்க்கை
c) முந்தைய வரலாறு
d) ஆயுள் எழுத்து
விடை: a
15. நடுவன் அரசு உ.வே.சா அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பாராட்டி அஞ்சல் தலை வெளியிட்ட வருடம்?
விடை: 2006.
16. தமிழ் தாத்தா என்று அன்போடும் உரிமையோடும் அழைக்கப்படும் நபர் யார்?
a) திரு வி கா
b) வா வே சு ஐயர்
c) உவேசா
d) வாஞ்சிநாதன்
விடை: c
17. நாலடியார் எனும் நூலை இயற்றியவர் யார்?
a) அவ்வையார்
b) சமணமுனிவர்
c) பாரதிதாசன்
விடை: b
18. முயற்சி திருவினையாக்கும் எனக் கூறியவர் யார்
a) அவ்வையார்
b) திருவள்ளுவர்
c) பாரதியார்
d) பாரதிதாசன்
விடை: b
19. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறியவர் யார்? விடை: வள்ளலார்
20. கூடுகட்டி வாழக்கூடிய ஒரே வகையான பாம்பு இனம் எது?
a) கொம்பேரி மூக்கன்
b) ராஜ நாகம்
c) சாரைப்பாம்பு
d) இவற்றில் எதுவுமில்லை
விடை: b
21. வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு என்ன?
விடை: 1972
22. தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் மொத்தம்(Dec 2021) எத்தனை?
விடை: 16
23. நான்மணிக்கடிகை நூலை இயற்றியவர் யார்?
விடை: விளம்பிநாகனாரன்
24. மடவார் எனும் பொருள்?
விடை: பெண்
25. புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் புகழப்படுபவர் யார்?
விடை: பாரதிதாசன்
26. மக்கள் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
விடை: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
27. நோபல் பரிசு வரலாற்றில் முதன் முதலாக நோபல் பரிசு பெற்ற பெண்மணி யார்?
விடை: மேரி கியூரி
28. பகுத்தறிவு கவிராயர் என அழைக்கப்படுபவர் யார்?
விடை: உடுமலை நாராயணகவி
29. சிறந்த ஊர்களை குறிக்கும் சொல் எது?
விடை: புரம்
30. கடற்கரையில் உருவாகும் நகரங்கள் எவ்வாறு பெயர் பெறும்?
விடை: பட்டினம்
31. கடற்கரைச் சிற்றூர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
விடை:பாக்கம்
32. குற்றால குறவஞ்சி இயற்றியவர் யார் ?
விடை: திரிகூடராசப்ப கவிராயர்