• Sun. May 28th, 2023

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை (TNFDC) வேலைவாய்ப்பு Last Date: 02 September 2021

Byexamsguru

Aug 14, 2021
Spread the love

இந்த செய்தியை கீழே உள்ள சோஷியல் மீடியா ஐகான்களை கிளிக் செய்து அனைவருக்கும் ஷேர் செய்து யாரேனும் ஒருவரின் வாழ்வில் ஒளி விளக்கேற்றுங்கள் ப்ளீஸ்..

முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் கீழ்க்காணும் விவரப்படி காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலை வகைதமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறைதபால்

பணியிட விபரங்கள்:

1. ஊர்தி ஓட்டுநர்

மொத்த எண்ணிக்கை: பல்வேறு பணியிடங்கள்

கல்வித் தகுதி:

10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இலகு ரக ஊர்தி ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்கவேண்டும்.

வயது வரம்பு:

அதிகப்பட்சம் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

அதிகப்பட்ச வயது வரம்பில் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரையும் அரசின் விதிமுறைப்படி அதிகப்பட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப / தேர்வுக்கட்டணம் எதுவும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

மேலே குறிப்பிட்டுள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்ப படிவத்தை டவுண்லோட் செய்து விண்ணப்பத்தினை முழுமையாக பூர்த்தி செய்து அத்துடன் தங்களின் அனைத்து கல்வி சான்றிதழ்கள், இதர சான்றிதழ்கள் மற்றும் அனுபவ சான்றிதழ் (இருப்பின்) சுய ஒப்பமிட்டு இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள், எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அவ்வாறு தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில்  தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்முகத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே தேர்வுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசிநாள்: 02-09-2021 மாலை 5 மணி

  1. Official Application Form Click Here

2. விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

செயற்பொறியாளர்
மீன்பிடித்துறைமுக திட்ட கோட்டம்,
ஒருங்கிணைந்த கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக வளாகம், நந்தனம், சென்னை-600 035.

Please click on the social media icons below to share this message with everyone and enlighten someone’s life.

Join our Groups

WhatsappTelegram

Our Recent Posts


Spread the love
error: Content is protected !!