தமிழகத்தில் கார்த்திகை தீபம் டிசம்பர் 6ம் தேதி செவ்வாய்கிழமை அன்று கொண்டாடப்படவுள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வர சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

10 நாட்களாக தொடர்ந்து நடைபெறும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள். இந்தாண்டு வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கவுள்ளது. இந்நிலையில் 6 ஆம் தேதி மாலை மெகா தீபம் ஏற்றப்படுவதால் இந்த முறை திருவண்ணாமலைக்கு 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு மற்றும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும் முடுக்கியுள்ளது.
இந்த நிலையில், தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் வரும் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தீபத் திருவிழாவை முன்னேற்பாடுகளை குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், திருவண்ணாமலைக்கு வர கூடுதலாக 2000 பேருந்துகளை இயக்க முதல்வரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது மற்றும் மாநகராட்சி, நகராட்சி சார்பில் வெளியில் இருந்தும் தூய்மை பணியாளர்களை ஏற்பாடு செய்துள்ளோம்.
போக்குவரத்தை சரி செய்ய சுமார் 4 ஆயிரம் காவலர்களை ஏற்பாடு செய்துள்ளோம். தீ விபத்து ஏற்படாமல் தடுக்கவும், சரி செய்யவும் 60 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருக்கும்.
மேலும், திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு துறை சார்பில் 5 இணை ஆணையர்கள், உதவி ஆணையர்களை கூடுதல் பொறுப்பாக நியமித்துள்ளோம் என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Examsguru நியூஸ் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.