தமிழக அஞ்சல் துறையில் ரூ.63200/- சம்பளத்தில் புதிய வேலை

Spread the love

தமிழக அஞ்சல் துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பில், ஸ்டாப் கார் டிரைவர் Staff car Driver பதவிக்கு தகுதியான இந்திய குடி மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 31.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Exams Guru examsguru

நிறுவனம்: தமிழக அஞ்சல் துறை

பணியின் பெயர்: Staff Car Driver

பணியிடங்கள்: 58

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.03.2023

விண்ணப்பிக்கும் முறை: Offline

தமிழக அஞ்சல் துறை காலிப்பணியிடங்கள்:

Staff Car Driver பதவிக்கு என மொத்தம் 58 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Chennai City Region – 6 பணியிடங்கள்

Central Region – 9 பணியிடங்கள்

MMS Chennai – 25 பணியிடங்கள்

Southern Region – 3 பணியிடங்கள்

Western Region – 15 பணியிடங்கள்

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும்.

SC/ ST விண்ணப்பத்தார்களுக்கு 5 ஆண்டுகள், OBC விண்ணப்பத்தார்களுக்கு 3 ஆண்டுகள்

ex-servicemen விண்ணப்பத்தார்களுக்கு 3 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மோட்டார் மெக்கானிசம் பற்றிய அறிவு இருக்க வேண்டும்.

வாகனத்தில் உள்ள சிறிய குறைபாடுகளை நீக்க தெரிந்திருக்க வேண்டும்.

இலகுரக மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருந்திருக்க வேண்டும்.


Spread the love

Related Posts