தமிழக ரேஷன் கடைகளில் இனி பணம் செலுத்துவது ரொம்ப ஈஸி! புதிய வசதி – 2023 !!
தமிழக ரேஷன் கடைகளில் பேடிஎம் செயலி மூலம் பணம் செலுத்தும் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பேடிஎம் செயலி:
இந்தியா முழுவதும் இன்றைக்கு டிஜிட்டல் வாயிலான பண பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் ரேஷன் கடைகளில் பயனாளிகள் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகள் மூலம் பணத்தை செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அண்மையில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
அதன்படி முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாய விலை கடைகளில் மத்திய கூட்டுறவு வங்கியுடன் இணைந்து UPI செயலிகள் வாயிலாக பண பரிவர்த்தனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தற்போது பயனாளிகள் பேடிஎம் வாயிலாகவும் பணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பேடிஎம் மூலம் பணம் செலுத்தும் முறை உணவு வழங்கல் துறையால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.