Spread the love

மத்திய அரசின் 11,409 காலிப்பணியிடங்களுக்கான SSC MTS போட்டித் தேர்வுகளை தேர்வாணையம் அண்மையில் அறிவித்தது. இத்தேர்விற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி, வயது உள்ளிட்ட சில குறிப்பிட்ட தகுதிகளை உடையவர்கள் இப் பணிக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

Exams Guru examsguru

இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களும் https://ssc.nic.in/ என்ற இணையத்தளத்தில் ஜனவரி 18ம் தேதி முதல் பிப்ரவரி 17ம் தேதி வரை வரவேற்கப்பட்டது.

ஆனால் சில தினங்களாக SSC இனயதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியாமல் போனது.

இதனால் இந்த SSC MTS போட்டித் தேர்வுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மதுரை எம்.பி. S.வெங்கடேசன் தேர்வாணையத்துக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். மேலும் கால அவகாசம் முடியும் தருவாயில்

இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறு அடிக்கடி ஏற்படுவதாகவும், இதுபோன்று ஒவ்வொரு தோர்வு விண்ணப்பிக்கும் இறுதி கட்டத்திலும் விண்ணப்பிப்பதில் கோலாருகள் ஏற்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.


Spread the love

Related Posts