Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2021/07/tn-logo.png

10-ம் வகுப்பு தகுதி; சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; உடனே விண்ணப்பிங்க!

Spread the love

மதுரை மாவட்ட சமூக நலத்துறையில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் இந்த அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

மதுரை மாவட்டத்தில் சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19.12.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

1. மைய நிர்வாகி 

காலியிடங்களின் எண்ணிக்கை : 1 காலியிடங்கள்

கல்வித் தகுதி: இளங்கலை சட்டம் அல்லது முதுகலை சமூகப் பணியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 30,000

2. வழக்கு பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1 காலியிடங்கள்

கல்வித் தகுதி : இளங்கலை சமூகப் பணியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 15,000

3. பல்நோக்கு மருத்துவ பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2 காலியிடங்கள்

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

சம்பளம் : ரூ. 6,400

4. காவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1 காலியிடங்கள்

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

சம்பளம் : ரூ. 10,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : தபால் வழி 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.12.2022

எவ்வாறு விண்ணப்பிப்பது?:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2022/12/2022120766.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி

District Social Welfare Officer, 

District Social Welfare Office, 

Third Floor, Additional Building of Collectorate, 

Madurai – 20.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2022/12/2022120770.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.


Spread the love

Related Posts