Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/07/Lakhimpur-news.webp

நாங்க எல்லாம் பள்ளி மாணவர்களுக்குஸ்கூட்டரே தருவோம்

Spread the love

சைக்கிள் என்ன சைக்கிள் நாங்க எல்லாம் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு ஸ்கூட்டரே தருவோம் 

அமைச்சரவை எடுத்த அதிரடி முடிவு…!

இந்த முடிவு எடுக்கப்பட்ட மாநிலம் அசாம்.

ஆமாங்க! அசாமில் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் மட்டுமின்றி இலவசமாக ஸ்கூட்டர் வழங்கவும் அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

வடகிழக்கு மாநிலமான அசாம் மாநிலத்தில் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அசாம் மாநிலம் முழுவதும் உள்ள 4,372 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் 3.78 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குவதற்கு சமீபத்தில் அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அசாம் தலைநகரான கவுகாத்தியில் நேற்று(July 5) நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கல்வி கற்கும் மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் மாணவர்களை மையமாகக் கொண்டு பலத் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன.

கல்வி நிலையங்களை நோக்கி மாணவர்களை ஈர்க்கவும், தக்கவைக்கவும் அரசின் திட்டங்கள் பயன்படுகின்றன.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் கூட காலை உணவுத்திட்டம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் என பல திட்டங்கள் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன.தற்போது இது போன்ற திட்டம் வடகிழக்கு மாநிலங்களிலும் தொடங்கியதை காட்டுகிறது.

அரசு இ-மார்க்கெட்பிளேஸ் (ஜிஇஎம்) போர்டல் மூலம் சைக்கிள்களை வாங்குவதற்கு ரூ.167.95 கோடியை மாநில அரசு அனுமதித்துள்ளது.இந்த திட்டம் குறித்து அசாம்‌ முதல்வர்‌ ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில், 9ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு ரூ.167.95 கோடி செலவில்‌, 3.76 லட்சம்‌ சைக்கிள்கள்‌, மேல்நிலை தேர்வுகளில்‌ 75 சதவீதம் மேல்‌ மதிப்பெண்‌ பெற்றவர்களுக்கு சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இலவசமாக வழங்கும்‌ திட்டத்துக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல்‌. எங்கள்‌ அமைச்சரவையின்‌ இந்த முடிவு கல்வியை மேம்படுத்துவதற்கும்‌, மாணவர்களின்‌ திறனுக்கு சிறகுகளை வழங்குவதற்கும்‌ பெரும்‌ ஊக்கமாக இருக்கும்‌ என தெரிவித்துள்ளார்.

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/07/Lakhimpur-news.webp

மேலும் அசாம் விவசாய பல்கலைக்கழகத்தில், ஓபிசி மற்றும், எம்ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு 15 விழுக்காட்டில் இருந்து 27 விழுக்காடாக உயர்த்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


Spread the love

Related Posts