உதவித்தொகை ரூ.1000 ஆக உயர்வு – புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!!
புதுச்சேரி மாநிலத்தில் SC, ST பிரிவினருக்கான உதவித்தொகை ரூ.500 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

SC, ST பிரிவினருக்கான உதவித்தொகை ரூ.1000 ஆக உயர்வு – முதல்வர் அறிவிப்பு!!
உதவித்தொகை:
புதுச்சேரி மாநிலத்தில் அரசு ஊழியர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கென ஏகப்பட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை மற்றும் விவசாயிகளுக்கு கடனுதவி, மாணவர்களின் மேற்படிப்புக்கு உதவும் வகையில் ஊக்கத்தொகை, இளைஞர்களுக்கு இலவச பயிற்சிகள், பழங்குடியின மக்களுக்கு உதவி தொகை என ஏகப்பட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கப்பட்டு வந்தது.
இதன் பின்னர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் அன்றாட வாழ்வுக்கு உதவும் வகையில் இலவச வேட்டி மற்றும் சேலைக்கு பதிலாக ரூ. 500 உதவி தொகை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது தீபாவளி பண்டிகையொட்டி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி அவர்கள் அறிவித்துள்ளார்.
அதாவது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான உதவி தொகை ரூ. 500 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ. 1000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.