தயவுசெய்து இந்த செய்தியை கீழே உள்ள சோஷியல் மீடியா ஐகான்களை கிளிக் செய்து அனைவருக்கும் ஷேர் செய்து யாரேனும் ஒருவரின் வாழ்வில் ஒளி விளக்கேற்றுங்கள் ப்ளீஸ்.

முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
கடலூர் சுகாதார பகுதி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறையின் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் தேசிய நலக் குழுமத்தின் தேசிய புகையிலை கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் நிறுவப்பட உள்ள மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையத்தில் பணிபுரிய கீழே பட்டியலிடப்பட்ட பணியிடங்களுக்கு ஒப்பந்தமுறையில் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட உள்ளது. தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக மட்டுமே நிரப்பப்படவுள்ளதால், கீழ்க்கண்ட தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
பணியிட விபரங்கள்:
1. மாவட்ட ஆலோசகர்
2. சமூக சேவகர்
3. உளவியலாளர்
4. மாவட்ட தரவு நுழைவு ஆப்ரேட்டர்
மொத்த எண்ணிக்கை: பல்வேறு பணியிடங்கள்
கல்வித் தகுதி:
1. மாவட்ட ஆலோசகர்
அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகத்திலிருந்து பொது சுகாதாரம் / சமூக சேவகர் (அல்லது) மேலாண்மை பாடப்பிரிவில் முதுகலை பட்டம்.
2. சமூக சேவகர்
சமூகவியலில் முதுகலை/இரண்டு வருடங்களுக்குமேல் சமூக பணி செய்த அனுபவம்.
3. உளவியலாளர்
உளவியல் முதுகலை / முதுகலை சமூக பணி (MSW) அல்லது உளவியலில் பட்டம் பெற்றவர் ஆலோசனை பயிற்சி மற்றும் இரண்டு வருடங்களுக்குமேல் துறையில் அனுபவம்.
4. மாவட்ட தரவு நுழைவு ஆப்ரேட்டர்
கணிணி அறிவு கொண்ட பட்டதாரி
வயது வரம்பு:
வயது வரம்பு குறித்து முழுமையான தகவல் தெரிவிக்கப்படவில்லை. அரசின் விதிமுறை கடைப்பிடிக்கப்படும்.
சம்பள விகிதம்:
1. மாவட்ட ஆலோசகர்
மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 40,000 வழங்கப்படும்.
2. சமூக சேவகர்
மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 25,000 வழங்கப்படும்.
3. உளவியலாளர்
மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 25,000 வழங்கப்படும்.
4. மாவட்ட தரவு நுழைவு ஆப்ரேட்டர்
மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 12,000 வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் தமது கல்வித்தகுதி மற்றும் தொடர்புடைய சான்றுகளின் அசல் மற்றும் சுய சான்றொப்பமிட்ட நகல்களுடன் கீழ் குறிப்பிட்டுள்ள நாளன்று நடைபெறும் நேர்காணலில் வந்து கலந்துகொள்ள வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.
1. நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்:
10.08.2021 (செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணி
2. நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடலூர்.
நிபந்தனைகள்:
1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது
2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
3. பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
4. நிர்வாக காரணங்களால் இந்த அறிவிப்பை இரத்து செய்யவோ அல்லது ஒத்தி வைக்கவோ மாவட்ட
நல குழுவிற்கு அதிகாரம் உள்ளது என்பதை அறியவும்.
தயவுசெய்து இந்த செய்தியை கீழே உள்ள சோஷியல் மீடியா ஐகான்களை கிளிக் செய்து அனைவருக்கும் ஷேர் செய்து யாரேனும் ஒருவரின் வாழ்வில் ஒளி விளக்கேற்றுங்கள் ப்ளீஸ்..