Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2021/07/tn-logo-1.png

அலுவலக உதவியாளர் பணி | 8 ஆம் வகுப்பு தேர்ச்சி | சம்பளம்: ரூ.15,700-58,100/-

Spread the love

ஈரோடு  மாவட்டத்தில் அமைந்துள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அம்மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு இந்த மாதம் 30-12-2022 மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பணியின் விவரங்கள்:

அலுவலக உதவியாளர்

பணியிடம்: 2 காலியிடங்கள்

சம்பளம்: ரூ.15,700-58,100/-

விண்ணப்பிக்கும் முறை:

தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்

வேலைவாய்ப்பு வகை: தமிழ் நாடு அரசு வேலை 

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 18 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். 

பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32 ஆகவும், 

பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 34 ஆகவும் மற்றும் 

ஆதிதிராவிடர் & பழங்குடியினர் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 37 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை. 

ஆதிதிராவிடர் & பழங்குடியினர் பிரிவு முன்னாள் இராணுவத்தினருக்கு அதிகபட்ச வயது 53 ஆகவும், 

பிற்படுத்தப்பட்டோர் பிரிவு முன்னாள் இராணுவத்தினருக்கு அதிகபட்ச வயது 48 ஆகவும் உள்ளது.

கல்வித்தகுதி:

8 ஆம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://skilltraining.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அதனுடன் புகைப்படங்கள், சான்றிதழ்கள் நகல்கள் இணைத்து பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்பக் கடைசி நாள் : 30.12.2022 மாலை 5.45

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

முதல்வர்,

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்,

காசிபாளையம், ஈரோடு – 638009.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய: இங்கே கிளிக் செய்யவும் 


Spread the love

Related Posts