சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 20 பேர் உயிரிழந்ததாக தகவல்!
விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணி தீவிரம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஹௌராவிற்கும் ஹவுராவிலிருந்து சென்னைக்கும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் இன்று இரவு 7 மணி அளவில் ஓடிசா மாநிலத்தில் பாலசோர் சரக்கு ரயில் மோதியதால் விபத்துக்குள்ளானது.
ஹௌராவிலிருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசா மாநிலம் பாலசோர் என்ற இடத்தில் அருகே வந்தபோது அந்த ரயிலின் மீது ஒரு சரக்கு ரயில் மோதியது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் நான்கு பொட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
நான்கு பொட்டிகள் தடம் புரண்டதில் பொட்டிகளில் பயணித்த பல பயணிகளுக்கு மிகவும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த விபத்தினால் பயணிகள் பலர் அலறி அடித்து ஐயோ அம்மா என்று கதறினார்கள். இந்த விபத்தினால் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த விபத்து நடந்ததை தொடர்ந்து அதிகாரிகளுக்கு தெரிந்ததால் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர் மீட்பு பணிகளும் மிகவும் துரிதமாக நடைபெற்று வருவதாக தெரிகிறது.
மேலும் இந்த விபத்திற்கு சரக்கு ரயில் காரணமா அல்லது பயணிகள் ரயில் காரணமா இல்லை சிக்னல் கோளாறுகளா போன்ற பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த பயணிகள் அனைவரும் அருகே உள்ள பாலசோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ரயில் பயணித்தவர்கள் பற்றிய விவரங்கள் அறிந்து கொள்வதற்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்காக தனியாக கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணையதள பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.