சென்னை தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் (NIRT) வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசிநாள் 16 August 2021

Spread the love

தயவுசெய்து இந்த செய்தியை கீழே உள்ள சோஷியல் மீடியா ஐகான்களை கிளிக் செய்து அனைவருக்கும் ஷேர் செய்து யாரேனும் ஒருவரின் வாழ்வில் ஒளி விளக்கேற்றுங்கள் ப்ளீஸ்..

Exams Guru examsguru

முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

சென்னை தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICMR-National Institute for Research in Tuberculosis – NIRT) கூடுதலாக உருவாக்கப்பட்ட கீழ்காணும்‌ பதவிகளுக்கு ஒப்பந்தமுறையில்‌ தற்காலிகமாக பணி நியமனம்‌ செய்யப்பட உள்ளது. தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக மட்டுமே நிரப்பப்படவுள்ளதால், கீழ்க்கண்ட தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

வேலை வகை: மத்திய அரசு

விண்ணப்பிக்கும் முறை: நேர்காணல்

பணியிட விபரங்கள்:

1. எக்ஸ்ரே தொழில்நுட்ப வல்லுநர்  (X-Ray Technician) – 3 பதவிகள்

2. ப்ராஜெக்ட் டிரைவர் கம் மெக்கானிக் (Project Driver Cum Mechanic) – 6 பதவி

மொத்த எண்ணிக்கை: 9 பணியிடங்கள்

கல்வித் தகுதி:

1. எக்ஸ்ரே தொழில்நுட்ப வல்லுநர்  (X-Ray Technician)

அறிவியல் பாடங்களில் 12 வது தேர்ச்சி பெற்று  radiology அல்லது radiography பிரிவில் இரண்டு வருட டிப்ளமோ அல்லது ஒரு வருட டிப்ளமோ மற்றும் ஒரு வருடம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் அனுபவம் தேவை. அல்லது
அரசு அங்கீகாரம் பெற்ற அமைப்பில் இரண்டு வருட தொடர்புடைய அனுபவம் இருக்க வேண்டும்.

அல்லது

B.Sc. radiology அல்லது radiography பிரிவில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

2. ப்ராஜெக்ட் டிரைவர் கம் மெக்கானிக் (Project Driver Cum Mechanic)

மெட்ரிக்/எஸ்.எஸ்.சி தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மற்றும் ஆர்டிஓ வழங்கிய லேசான மோட்டார் வாகனத்தை இயக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். (பொருட்கள் & பயணிகள்) மற்றும் இரு சக்கர வாகனம் கியர்/இல்லாமல் மற்றும் இரண்டு ஆண்டுகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் அனுபவம்.

வயது வரம்பு:

1. எக்ஸ்ரே தொழில்நுட்ப வல்லுநர்  (X-Ray Technician)

30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

2. ப்ராஜெக்ட் டிரைவர் கம் மெக்கானிக் (Project Driver Cum Mechanic)

25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பள விகிதம்:

1. எக்ஸ்ரே தொழில்நுட்ப வல்லுநர்  (X-Ray Technician)

மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 18,000 வழங்கப்படும்.

2. ப்ராஜெக்ட் டிரைவர் கம் மெக்கானிக் (Project Driver Cum Mechanic)

மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 16,000 வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும்‌ விருப்பமும்‌ உடைய விண்ணப்பதாரர்கள்‌, இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்பப் படிவத்தினை டவுண்லோட் செய்து நகலெடுத்து (xerox) அதனை நிரப்பி அத்துடன் தமது கல்வித்தகுதி மற்றும்‌ தொடர்புடைய சான்றுகளின்‌ அசல்‌ மற்றும்‌ சுய சான்றொப்பமிட்ட நகல்களுடன்‌ கீழ் குறிப்பிட்டுள்ள நாளன்று நடைபெறும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலில் வந்து கலந்துகொள்ள வேண்டும். மேற்காணும் பணியிடங்களுக்கு நேர்காணலுக்கு வரும்போது கீழ்க்காணும் ஆவணங்கள் அனைத்தும் தவறாமல் எடுத்து வர வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

1. இந்த வேலைவாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பத்தினை (Official Notification & Application Form) டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

2. இந்த வேலைவாய்ப்பின் அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தினை (Official Application Form) டவுண்லோ செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

3. நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்:

17.08.2021 காலை 09.30 மணி முதல்

4. நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

ICMR-National Institute for Research in Tuberculosis,

No.1, Mayor Satyamoorthy Road,

Chetpet, Chennai – 600 031.

தயவுசெய்து இந்த செய்தியை கீழே உள்ள சோஷியல் மீடியா ஐகான்களை கிளிக் செய்து அனைவருக்கும் ஷேர் செய்து யாரேனும் ஒருவரின் வாழ்வில் ஒளி விளக்கேற்றுங்கள் ப்ளீஸ்..


Spread the love

Related Posts