IAF இந்திய விமானப்படையில் 3,500+ காலி பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம்!
இந்திய விமானப்படையில் காலியாகவுள்ள பணியிடம் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் தகுதியுள்ளவர்கள் ஜூலை 27 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானப்படை:
இந்திய விமானப்படை (IAF) அக்னிபாத் வாயு திட்டத்தின் கீழ் அக்னிவீரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, விமானப்படையில் 3,500 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ள நிலையில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி IAF :
அதாவது, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கில பாடப் பிரிவில் குறைந்தது ஐம்பது சதவீத தேர்ச்சி
அல்லது மூன்று ஆண்டுகள் டிப்ளமோ பிரிவில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது ஐடி துறையில் 50 சதவீத தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது
கணிதம் அல்லது இயற்பியல் பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீதம் மதிப்பெண் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளவர்கள்.
இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செயல்முறை IAF 2023:
மேலும், இந்த காலிப் பணியிடத்திற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாகவே வரும் ஜூலை 27ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விருப்பமும் தகுதியும் பெற்றவர்கள் ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும் படி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பத்தில் ஏதேனும் தவறு இருந்தால் ஆகஸ்ட் 17 முதல் 19 வரை அதனை சரி செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அக்னி வீரர்களை தேர்வு செய்வதற்கான தகுதி தேர்வு அக்டோபர் 13ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.