Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/08/1445487-2.jpg

அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

Spread the love

இந்து சமய அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; 8 ஆம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/08/1445487-2.jpg

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, நாமக்கல் அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலில் தொடங்க உள்ள அர்ச்சகர் பயிற்சி பள்ளிக்கு ஆசிரியர், விடுதி காப்பாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.08.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.


அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 11,600 – 36,800


தமிழ் ஆசிரியர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

தமிழில் முதுகலைப் பட்டம் மற்றும் பி.டி அல்லது பி.எட் படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டு அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 20,600 – 65,500


ஆகம ஆசிரியர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு வேத ஆகம பாடசாலையில் ஆசிரியராக 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். அல்லது 5 ஆண்டுகள் அர்ச்சகராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். மற்றும் 4 ஆண்டு படிப்பிற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 20,600 – 65,500


விடுதிக் காப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 20,600 – 65,500


சமையலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். உணவு தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 11,600 – 36,800


தூய்மை பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 11,600 – 36,800


வயதுத் தகுதி:

01.07.2023 அன்று 18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை :

இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://namakkalanjaneyar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.

முகவரி:

உதவி ஆணையர்/ செயல் அலுவலர்,

அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயில்,

நாமக்கல் – 637001.


Spread the love

Related Posts