Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/10/gold-rate-chn-11th-July-2019.webp

தமிழகத்தில் தங்கத்தின் விலை சரிவு – குஷியில் பெண்கள்.. உடனே நகை வாங்குங்க!!

Spread the love

தமிழகத்தில் தங்கத்தின் விலை சரிவு – குஷியில் பெண்கள்.. உடனே நகை வாங்குங்க!!

தமிழகத்தின் ஆபரணத்தங்கத்தின் விலை மாத தொடக்கத்தில் இருந்து சற்று ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்று மகிழ்ச்சி அளிக்கும் வகையில் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/10/gold-rate-chn-11th-July-2019.webp
தங்கம் விலை:

தமிழகத்தில் கடந்த மாதங்களில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. இதனால் நகை பிரியர்களும் திருமணத்திற்கு நகைகள் வாங்குவோரும் அதிக ஆர்வத்துடன் தங்க அணிகலன்களை வாங்கி வந்தனர்.

இந்த நிலையில் இம்மாத தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலை நிலையாக இல்லாமல் தினந்தோறும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. நேற்று ஒரு சவரனுக்கு ரூ.120 உயர்ந்த நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 64 குறைந்துள்ளது.

இன்றைய காலை நேர நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ. 42, 976-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல ஒரு கிராம் தங்கம் ரூ.8 குறைந்து ரூ. 5,372 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி 50 காசுகள் குறைந்து கிராம் ரூ.75-க்கும் கிலோ வெள்ளி ரூ. 75,000-க்கும் விற்பனை ஆகி வருகிறது.


Spread the love

Related Posts