குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 கிடைப்பதில் சிக்கலா?: அமைச்சர் பதில். ரேஷன் கார்டில் முக்கிய மாற்றம்?

Spread the love

குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை கிடைக்க வேண்டுமென்றால் ரேஷன் கார்டில் மாற்றம் செய்ய வேண்டுமா?

திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த வாக்குறுதி திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சமாக இருந்தது.

முதற்கட்டமாக கொரோனா நிவாரணமாக குடும்பத்துக்கு ரூ. 4000, ஆவின் பால்விலை லிட்டருக்கு  3 ரூபாய் குறைப்பு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும், அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் ஆகியவற்றை அமல்படுத்தியவாறே இந்த வாக்குறுதியையும் நிறைவேற்றிவிட்டால் குடும்ப தலைவிகளின் நம்பிக்கையை திமுக ஏறக்குறைய பெற்றுவிடும். ஆனால் குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் திட்டம் 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் புதிதாக பதிவி ஏற்ற அரசு நடைமுறைப்படுத்துவதில் சுணக்கம் காட்டி உள்ளது.

தற்போது, பொதுமக்களிடம் இருந்தும், செய்தியாளர்களிடம் இருந்தும், எப்போது குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகை கிடைக்கும்? என்ற கேள்விகள் பரவலாக வைக்கப்படுகின்றன. சமிபத்தில், செய்தியாளர்களை சந்தித்த உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.சக்கரபாணி, ” அவர்கள் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை நிதிநிலையை கருத்தில்கொண்டு உரிய நேரத்தில் முதலமைச்சர் அறிவிப்பார்” என தகவல் கூறினார்.அதனை தொடர்ந்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு ”தேர்தல் வாக்குறுதியில் சொல்லாததையும் நிறைவேற்றி வருகிறோம். நாங்கள் ஐந்தாண்டுக் காலம் ஆட்சிபுரிய மக்கள் அனைவரும் வாக்களித்து எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர் ; அதனால் நாங்கள் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த அனைத்தையும்  கட்டாயம் செய்வோம். கட்டாயம் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும்” என கூறினார்.

அதற்கான அறிவிப்பை எதிர்பார்த்துள்ள குடும்பத்தலைவிகளுக்கு எல்லோருக்கும் ரூ.1000 உரிமை தொகை கிடைக்குமா? ரேஷன் கார்டில் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமா? என்ற குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ரேஷன் கார்டில் குடும்ப தலைவிகள் பெயர் மட்டுமின்றி புகைப்படமும் இருந்தால் மட்டுமே ரூ. 1000 கிடைக்கப்பெறும் என்ற தகவல் பரவலாக எழுந்துள்ளது.

இதனால், பலரும் தங்களது ரேஷன் கார்டுகளை எடுத்துக்கொண்டு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு விரைகின்றனர். ஆனால், தமிழக அரசிடம் இருந்து அதுபோன்ற தகவல்கள் அதிகாரபூர்வமாக வரவில்லை. எனவே, அரசின் அறிவிப்பு வரும் வரை குடும்ப தலைவிகள் காத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் திமுக அரசுக்கு எதிராக மாநிலம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்: ஈபிஎஸ் – ஓபிஎஸ் அறிவிப்பு

ஒருவேளை குடும்ப அட்டையில் குடும்ப தலைவர் என்ற பெயரில் மாற்றம் செய்ய வேண்டும் என்றாலோ அல்லது குடும்ப தலைவியின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றாலோ எளிமையாக ஆன்லைன் கோரிக்கை மூலம் செய்து முடிக்கலாம்.

எனவே பொதுமக்கள் அத்தகைய செய்தி அறிவிப்பு வரும்வரை பொறுமையாக காத்திருக்கவும்.

இந்த செய்தியை மறக்காமல் உங்களுடைய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிரவும்.

Join Our Groups

WhatsappTelegram

Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *