Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/12/ceg.jpg

நாளை நடக்கவிருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

Spread the love

வங்க கடலில் இன்று மிக்ஜாம் புயல் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழக மற்றும் சென்னை பல்கலைக்கழக பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/12/ceg.jpg

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுவரும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

தற்போது இந்த புயல் சென்னையில் இருந்து சுமார் 340 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தேர்வுகள் ஒத்திவைப்பு:

இந்த நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கண்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 04ம் தேதி நடைபெற இருந்த பருவ தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.