200க்கும் மேற்பட்ட வேலை பலதரப்பட்ட நிறுவனங்கள் 10,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவித்துள்ளனர்.

இடம்: ஈரோடு மாவட்டம் பெருந்துறை ரோடு, நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாள்: 21.01.2023, நேரம்: காலை 8 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுடைய இளைஞர்கள், தங்களுடைய
- கல்விச் சான்றிதழ்,
- ஆதார் அட்டை,
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும்
- சுயவிவர குறிப்புடன் செல்ல வேண்டும்.
இம்முகாமில் 200க்கும் மேற்பட்ட வேலையளிக்கும் நிறுவனங்கள் 10,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவித்துள்ளதாகவும், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம் என்றும் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இடம்: ஈரோடு மாவட்டம் பெருந்துறை ரோடு,
நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
நாள்: 21.01.2023,
நேரம்: காலை 8 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை.