Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/07/627bc4ec909d95f734d28f51-3.png

மத்திய அரசு வேலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் வாங்க கை நிறைய சம்பளம் 553 காலிபணிடங்கள் கடைசி தேதி: ஆகஸ்ட் 4.

Spread the love

சென்னை:

இந்திய தர கவுன்சிலான கியூசிஐ-வில் காலியாக உள்ள 553 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி, தேர்வு நடைபெறும் தேதி உள்ளிட்ட விரிவான விவரங்களை இங்கே பார்க்கலாம்.

இந்திய தர கவுன்சில் (கியூசிஐ) மூலம் காப்புரிமை, வடிவமைப்பு குழு சார்ந்த பதவிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித்தகுதி:

B.E, B.Tech, M.E., M Tech, M.sc.,Bio Chemistry, Food Engineering உள்ளிட்ட பட்ட படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்களுக்கு தேவையான துறை சார்ந்த பட்டப்படிப்பு விவரம் தேர்வு அறிவிப்பில் விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு:

4-8-2023 அன்றைய தேதிப்படி 21 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.

முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி:

ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். https://qcin.org/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

சம்பளம் விவரம்:

சம்பளத்தை பொறுத்தவரை ரூ.56,100 முதல் 1 லட்சத்து 77 ஆயிரத்து 500 வரை கிடைக்க வாய்ப்புள்ளது. காலிப்பணியிடங்கள் உத்தேச எண்ணிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணமாக: ரூ. 1000 செலுத்த வேண்டும்.

SC/ST பிரிவினர் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் விண்ணப்ப கட்டணமாக: ரூ 500 செலுத்தினால் போதும்.

தேர்வு எழுதும் முறை:

தேர்வுகள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும். முதன்மை தேர்வு ஆன்லைன் மூலமாகவும் மெயின்ஸ் தேர்வு ஆஃப்லைன் முறையிலும் நடைபெறும். மெயின்ஸ் தேர்வு விவரித்து எழுதக் கூடிய வகையில் இருக்கும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஆகும்.

முதல் நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியிடப்படும்.

முதல் நிலைத் தேர்வு செப்டம்பர் 3 ஆம் தேதி நடைபெறும். மெயின் தேர்வு அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறும்.

மெயின் தேர்வு முடிவுகள் அக்டோபர் 16 ஆம் தேதி வெளியாகும். நேர்முகத்தேர்வு நவம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதி நடைபெறும்.

தேர்வு குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக்

Notification: Click Here


Spread the love

Related Posts