சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான (BHEL)பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 232 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அவற்றை தெளிவாக படித்து புரிந்து கொண்ட பின் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம். நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது.
இந்த நிலையில் பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 236 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெங்களூர், காசியாபாத் புனே, தெலுங்கானா, சென்னை, மசிலிபட்டினம், பஞ்சகுலா, கோட்வரா மற்றும் நவி மும்பை ஆகிய இடங்களில் தேர்வு செய்யப்படும் விண்னப்பதாரர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். பெல் நிறுவனத்தின் அறிவிப்பு பற்றிய விவரங்களை காணலாம்.
பணி விவரம்:
பிராபேஷனரி என்ஜினீயர் (Electronics and Communication) -124 பணியிடங்கள்.
பிராபேஷனரரி என்ஜீனியர் (மெக்கானிக்கல்) -18 பணியிடங்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் -18 இடங்களும், மனித வள மேம்பாடு -12 பணியிடங்களும், அக்கவுண்ட்ஸ் ஆபிசர் (பைனான்ஸ்) -15 பணியிடங்களும் நிரப்படுகின்றன.
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து என்ஜினீயரிங் படித்து இருக்க வேண்டும். துறை சார்ந்த படிப்புகள் கேட்கப்பட்டுள்ளன.
கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பாணையில் விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும், அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பளம்:
மாதம் ரூ.40 ஆயிரம் முதல்1,40,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
கணிணி வழி தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: ஆர்வமும் போதுமான கல்வி தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/84142/Index.html என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரகளுக்கான பயிற்சி காலம் உள்ளிட்ட நிபந்தனைகளை தேர்வு அறிவிப்பில் கவனமாக படித்து தெரிந்து கொள்ளவும்.