பெண்கள் சேவை மையத்தில் வேலை | 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்

Spread the love

அரியலூர் மாவட்டத்தில் குடும்பம் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவைப்படும் அவசரகால மீட்பு, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி, தற்காலிக தங்குமிடம், உணவு ஆகியவற்றை வழங்கி அவர்களை பாதுகாப்பதற்காக சமூக நலத்துறையின் கீழ் உள்ள “சகி”- ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) எனும் அமைப்பு செயல்படுகின்றது. 

Exams Guru examsguru

இந்த அமைப்பில் பணிபுரிய, 

1. பல்நோக்கு உதவியாளர் ( Multipurpose Helper), 

2. பாதுகாவலர் (Security Guard) நிலைகளில் ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

காலியட விவரங்கள்:

பதவி – 2 பல்நோக்கு உதவியாளர்( Multipurpose Helper) மற்றும்

1 பாதுகாவலர் (Security Guard)

கல்வித் தகுதி: 8 வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி/தோல்வி

வயது வரம்பு:  21- 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

வேலை வாய்ப்பு வகை: TN Jobs

பணியிடம்: அரியலூர் மாவட்டம், தமிழ் நாடு.

தகுதி: நிர்வாக அமைப்பின் கீழ் பணி புரிந்தவராகவும்/சமையல் தெரிந்த பெண் பணியாளராக இருத்தல் வேண்டும்; 

24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படும்; 

உள்ளூரை சார்ந்தவராக இருக்க வேண்டும்; 

பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

சம்பளம்: பல்நோக்கு உதவியாளர் பதவிக்கு தொகுப்பு ஊதியமாக  ரூ. 6,400 வரை வழங்கப்படும், 

பாதுகாவலர் பதவிக்கு தொகுப்பூதியமாக ரூ. 10, 000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.


Spread the love

Related Posts