தயவுசெய்து இந்த செய்தியை கீழே உள்ள சோஷியல் மீடியா ஐகான்களை கிளிக் செய்து அனைவருக்கும் ஷேர் செய்து யாரேனும் ஒருவரின் வாழ்வில் ஒளி விளக்கேற்றுங்கள் ப்ளீஸ்..
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University, Chennai Recruitment 2021) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தற்காலிகமாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | இமெயில் & தபால் |
பணியிட விபரங்கள்:
1. ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லவ் (Junior Research Fellow – SRF)
2. டெக்னிக்கல் அசிஸ்டண்ட் (Technical Assistant)
மொத்த எண்ணிக்கை: பல்வெறு பணியிடங்கள்
கல்வித் தகுதி:
1. ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லவ் (Junior Research Fellow – SRF)
அரசு அங்கீகரித்த கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து முதுகலை பட்டத்தை Chemistry/ Applied Chemistry/ Analytical Chemistry/ Inorganic Chemistry/ Nano Science and Technology ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
2. டெக்னிக்கல் அசிஸ்டண்ட் (Technical Assistant)
அரசு அங்கீகரித்த கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து முதுகலை பட்டத்தை Chemistry/ Applied Chemistry/ Analytical Chemistry/ Nano Technology ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
உயர் வயது வரம்பு குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தமிழக அரசின் விதிமுறை மற்றும் வழிகாட்டுதல் பின்பற்றப்படும்.
சம்பள விகிதம்:
1. ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லவ் (Junior Research Fellow – SRF)
மாத ஊதியமாக குறைந்தப்பட்சம் ரூ. 31,000/- வழங்கப்படும்.
2. டெக்னிக்கல் அசிஸ்டண்ட் (Technical Assistant)
மாத ஊதியமாக குறைந்தப்பட்சம் ரூ. 10,000/- வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தேர்வுக் கட்டணம் எதுவும் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
மேலே குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள்
i) இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்ப படிவத்தை டவுண்லோட் செய்து அதனை நகலெடுத்து (Xerox) விண்ணப்பப் படிவத்தை நிரப்பி அத்துடன் புகைப்படத்துடன் கூடிய பயோடேட்டாவுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து எந்த பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை “Application for the post of ____” தெளிவாக குறிப்பிட்டு இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக கிடைக்குமாறு தபால் மூலம் அனுப்பி வைக்கவும்.
ii) தபால் மூலம் அனுப்பிய ஸ்கேன் செய்யப்பட்ட நகலுடன் தேவையான அனைத்து கல்வி சான்றிதழ்கள் மற்றும் அனுபவ சான்றிதழ் (இருப்பின்) சுய ஒப்பமிட்டு இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இமெயில் ஐடிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது எந்த பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை குறிப்பிடும் விதமாக “Application for …………………..” என தெளிவாக Subject பிரிவில் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். rajendranarasi@gmail.com
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் அனைவரும் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் இமெயில் ஐடிக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு செய்தி அனுப்பப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20-08-2021
இந்த வேலை வாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை (Official Notification & Application Form) டவுண்லோட் செய்ய Click Here
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Dr. N. Rajendran,
Professor and Head,
Department of Chemistry,
Anna University, Chennai 600025.
Join our Groups
தயவுசெய்து இந்த செய்தியை கீழே உள்ள சோஷியல் மீடியா ஐகான்களை கிளிக் செய்து அனைவருக்கும் ஷேர் செய்து யாரேனும் ஒருவரின் வாழ்வில் ஒளி விளக்கேற்றுங்கள் ப்ளீஸ்..