விவசாயத் துறையில் வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசிநாள் 23 August 2021 – Apply Now

Spread the love

இந்த செய்தியை கீழே உள்ள சோஷியல் மீடியா ஐகான்களை கிளிக் செய்து அனைவருக்கும் ஷேர் செய்து யாரேனும் ஒருவரின் வாழ்வில் ஒளி விளக்கேற்றுங்கள் ப்ளீஸ்..

முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையுடன் (DARE) இந்திய அரசாங்கத்தின் வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் கீழ் இணைக்கப்பட்டு மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் (ASRB) விவசாயத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழே பட்டியலிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழ்க்காணும் விவரப்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

Exams Guru examsguru
வேலை வகைமத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

பணியிட விபரங்கள்:

1. நிர்வாக அதிகாரி (Administrative Officer – AO) – 44 பதவிகள்

2. நிதி மற்றும் கணக்கு அலுவலர் (Finance & Accounts Officer – FAO) – 21 பதவிகள்

மொத்த எண்ணிக்கை: 65 பணியிடங்கள்

கல்வித் தகுதி:

1. நிர்வாக அதிகாரி (Administrative Officer)

i) அரசு அங்கீகரித்த கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து குறைந்தப்பட்சம் 55% சதவிகிதம் மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

ii) கணினி இயக்கும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்.

2. நிதி மற்றும் கணக்கு அலுவலர் (Finance & Accounts Officer)

i) அரசு அங்கீகரித்த கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து குறைந்தப்பட்சம் 55% சதவிகிதம் மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

விரும்பத்தக்க தகுதி:

Finance/ Accounting/ Commerce போன்ற பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள். அல்லது CA / ICWA / CS போன்ற தொழில்முறை பட்டம் தேர்ச்சிப் பெற்றவர்கள்.

வயது வரம்பு:

i) 23.08.2021 ன் படி குறைந்தப்பட்சம் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். (24.08.1991 முதல் 23.08.2000 க்குள் பிறந்தவர்கள்)

ii) SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் அதிகப்பட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சம்பள விகிதம்:

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் வழிகாட்டுதலின்படி Pay Level 10 of 7th CPC Pay Matrix [Pre-revised PB-3ன் படி மாத ஊதியமாக குறைந்தப்பட்சம் ரூ. 15,600/- முதல் அதிகப்பட்சம் ரூ. 39,100 வரை வழங்கப்படும். மேலும் (Grade Pay) ரூ. 5,400 வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கீழ்கண்டவாறு தேர்வுக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

1. நிர்வாக அதிகாரி (Administrative Officer)

Category of candidateExamination fee (₹)Registration fee (₹)Total (₹)
UR / OBC / EWS480/-20/-500/-
Women/ Schedule Caste/ Schedule Tribe / Person with Benchmark Disability NIL20/-20/-

2. நிதி மற்றும் கணக்கு அலுவலர் (Finance & Accounts Officer)

Category of candidateExamination fee (₹)Registration fee (₹)Total (₹)
UR / OBC / EWS480/-20/-500/-
Women/ Schedule Caste/ Schedule Tribe / Person with Benchmark Disability NIL20/-20/-

3. நிர்வாக அதிகாரி (Administrative Officer) மற்றும் நிதி மற்றும் கணக்கு அலுவலர் (Finance & Accounts Officer)

Category of candidateExamination fee (₹)Registration fee (₹)Total (₹)
UR / OBC / EWS960/-40/-1000/-
Women/ Schedule Caste/ Schedule Tribe / Person with Benchmark Disability NIL40/-40/-

விண்ணப்பக்கட்டணத்தை டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு / இன்டர் நேட் பேங்கிங் / யுபிஐ போன்றவற்றின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேலே குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியம் (ASRB) அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான நேரடி லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடிக்கு தெரிவிக்கப்படும். எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 23-08-2021 மாலை 5 மணி

Important Links

NotificationClick Here
Apply OnlineClick Here
Telegram groupClick Here
Whats AppClick Here

Join our Groups

WhatsappTelegram
Exams Guru examsguruExams Guru examsguru

Spread the love

Related Posts