ஆவின் பால் விலை உயர்வு? அமைச்சர் விளக்கம்!!
தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை அதிகமாகி வரும் நிலையில் ஆவின் பால் விலை உயர வாய்ப்புள்ளதா என அமைச்சர் அறிவித்துள்ளார்.

ஆவின் விலை:
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டில் ஆவின் பால் விற்பனை லாபகரமாக நடைபெற்று வருவதாக பால் வளத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
அதாவது, பாலின் தரத்திற்கு ஏற்ப கொள்முதல் விலை வழங்கப்படுவதால் நாளொன்றுக்கு மட்டுமே 29.50 லட்சம் லிட்டர் உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டில் 115 கோடி வருமானம் கிடைத்த நிலையில் இந்தாண்டு 149 கோடியாக அதிகரித்துள்ளது.
மேலும், இந்த வருமானத்தை அதிகரிக்க செய்யும் வகையில் 300, 500, 900 ரூபாய் கொண்ட காம்போ பாக்கெட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வருமானம் கிடைக்க உறுதுணையாக இருந்த சங்க ஊழியர்களுக்கு இடைக்கால ஊதிய உயர்வு வழங்கவுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
மேலும், பால் விற்பனையாளர்களுக்கு லாபம் கிடைக்க செய்யும் வகையில் கொள்முதல் விலையை உயர்த்த திட்டமிட்டு வருவதாகவும், ஆவின் பால் விலையை உயர்த்தும் எண்ணம் இல்லை எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.