கோவை: கோவை மாவட்ட ஆவினில் காலியாக உள்ள வெட்னரி கன்சல்டன்ட் பணியிடங்களுக்கு தேர்வு இன்றி நேர்க்காணல் வழியில் யில் மாதம் ரூ.43,000 சம்பளத்தில் நிரப்பப்பட உள்ளது.தமிழ்நாடு அரசின் பால்வளத்துறையின் கட்டுப்பாட்டில் ஆவின் நிறுவனம் இயங்கி வருகிறது.
இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் மாவட்ட வாரியாக நிரப்பப்பட்டு வருகிறது.

தற்போது கோவை மாவட்ட ஆவினில் காலியாக உள்ள பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியிட்டு இருக்கிறது. அதன்விபரம் பின்வருமாறு:
கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட்டில் காலியாக உள்ள
பணி:
வெட்னரி கன்சல்டன்ஸ் (கால்நடை ஆலோசகர்) பணிக்கு 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வித்தகுதி:
இந்த பணிக்கு இளங்கலை வெட்னரி சயின்ஸ் & அனிமல் ஹஸ்பன்ட்ரி படிப்பை (B.V.Sc. & A.H) படித்திருப்பதோடு, கம்யூட்டர் பயன்படுத்தும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
மாத ஊதியம்:
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
மேலும் Transport செலவுக்காக ரூ.8 ஆயிரம், மற்றும்
Incentives ஆக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
இதன்மூலம் மாத சம்பளமாக ரூ.43 ஆயிரம் வரை கிடைக்கும்.
வயது வரம்பு:
விண்ணப்பம் செய்வோர் 50 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
மேலும் இந்த பணிக்கு எழுத்து தேர்வு எதுவும் இல்லை.
நேர்க்காணல் மட்டுமே உள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக நேர்க்காணலில் பங்கேற்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்க்காணல் முகவரி:
பணிக்கான நேர்க்காணல் என்பது
New Dairy Complex,
Pachaplayam, Kalampalayam (Po),
Perur (Via), Coimbatore 641 0101
என்ற முகவரியில் வரும் 14ம் தேதி காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இது ஒரு தற்காலிக பணியாகும். இவ்வாறு பணிக்கு தேர்வாகும் நபர்கள் 2024 ஜூலை 31ம் தேதி வரை பணியில் அமர்த்தப்படுவார்கள்.
நேர்காணலின்போது தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்:
நேர்க்காணலுக்கு செல்வோர் தங்களின் 1. பயோடேட்டா,
2. சுயசான்றொப்பமிட்ட கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும்.
இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பணியாகும். தேர்வாகும் நபர்கள் 2024 மே மாதம் 31ம் தேதி வரை பணி செய்ய முடியும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த அருமையான வேலை வாய்ப்பு தகவலை உங்களுடைய நண்பர்களுக்கும்.