பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் ([24] AI)5000 பேருக்கு வேலைவாய்ப்பு – புதிய அறிவிப்பு!

Spread the love

Kindly share this post for your friends and your neighbors via below the social icons. This opportunity is helpful for their also please share this post.

Exams Guru examsguru

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் [24] 7.ai என்ற மென்பொருள் (Software) மற்றும் சேவை(service) நிறுவனம் தற்பொழுது துவங்கியுள்ள புதிய நிதியாண்டில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

பெங்களூரில் இயங்கி வரும் இந்த நிறுவனம் உலகளாவிய வாடிக்கையாளர்களை நிர்வகிக்க குரல்(Voice), சேட் மற்றும் கலப்பு செயல்முறைக்கு பராமரிப்பு நிர்வாகிகள் பணிகளில் நிரந்தர ஊழியர்களை பணியமர்த்த உள்ளது. தற்போது, கொரோனா தொற்று காரணமாக [24] 7.ai நிறுவனத்தின் 80% பேர் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள். இதனிடையே புதிய பணியமர்த்தல் குறித்து [24] 7.ai யின் SVP மற்றும் HRD தலைவர் நினா நாயர் கூறுகையில், ‘கடந்த 18 மாதங்களில் வாடிக்கையாளர் தேவைகள் மாறியுள்ளதால் நாங்கள் சில்லறை, BFSI மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஊழியர்களை பணியமர்த்துகிறோம்.

இது ஒரு பருவகால பணியமர்த்தல் என்பதால் சில்லறை விற்பனை ஏற்றம் கண்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் 35% முதல் 40% குறைப்பு விகிதங்களை கொண்டிருப்பதால் நிறுவனம் 3,800-4,000 பேரை வேலைக்கு அமர்த்துகிறது’ என்று தெரிவித்துள்ளார். இதனிடையே கொரோனா தொற்று நோய்களின் போது இந்த நிறுவனம் எந்தவொரு ஊழியர்களையும் பணி நீக்கம் செய்யவில்லை என்று அவர் கூறியுள்ளார். தற்போது துவங்க இருக்கும் புதிய பணியமர்த்தல் செயல்முறையை முற்றிலும் ஆன்லைனில் நடத்த நிறுவனம் முடிவு எடுத்துள்ளது.

கொரோனா நோய் தொற்று நிமித்தமாக HR குழு, புதிய ஊழியர்களின் சுயவிவரங்களை சமூக ஊடகங்கள், பணியாளர் பரிந்துரைகள், ஆலோசகர்கள் மற்றும் வேலைவாய்ப்பு இணையதளங்கள் மூலம் மேற்கொள்ள ஆலோசித்து வருகிறது. இதனிடையே தொலைதூர முகவர்களுக்கான பாதுகாப்பு சேவைகளின் இரண்டு பகுதிகளான பணியிடம் மற்றும் பரிவர்த்தனைகளை சரிபார்க்க AI எனும் செயற்கை நுண்ணறிவு சேவைகளை இந்நிறுவனம் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Join our Groups

WhatsappTelegram
Exams Guru examsguruExams Guru examsguru

தயவு செய்து இந்த செய்தியை கீழே உள்ள Social Icons வழியாக உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும் அவர்களுக்கும் இந்ந செய்தி பயனுள்ளதாக இருக்கும்.


Spread the love

Related Posts