புதுச்சேரி அரசில் காலியாக உள்ள இளநிலை எழுத்தர் மற்றும் பண்டக காப்பாளர் பணியிடங்கள்; 210 காலியிடங்கள்;

தேர்வு விவரம் இதோ?
எல்.டி.சி(லோவர் டிவிஷன் கிளர்க்), ஸ்டோர் கீப்பர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 27 ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும் என புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையில் 165 இளநிலை எழுத்தர் (எல்.டி.சி) மற்றும் 55 ஸ்டோர் கீப்பர் நிலை-3 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது.
இதற்கு புதுவையை பூர்வீகமாக கொண்டவர்கள் தகுதியுடையவர்கள் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இப்பொழுது இந்த பணியை குறித்து முழு விவரங்களை காண்போம்.
காலியிடங்கள்:இளநிலை எழுத்தர் (LDC)மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 165
இந்நிலையில் எல்.டி.சி மற்றும் ஸ்டோர் கீப்பர் பணியிடங்களுக்கு
எழுத்து தேர்வு வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹால் டிக்கெட் பதிவிறக்கம், தேர்வு நடைபெறும் இடங்கள் போன்றவை விரைவில் அறிவிக்கப்படும் என சார்பு செயலாளர் ஜெய்சங்கர் அவர்கள் அறிவித்துள்ளார்.
எழுத்து தேர்வுக்கான கேள்விகள் 12ம் வகுப்பு தரத்தில் இருக்கும். ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வீதம் 100 கேள்விகள் அடங்கிய வினாத்தாளுடன் 2 மணி நேரம் தேர்வு நடைபெறும்.
கேள்விகள் பின்வருமாறு பாடத்திலிருந்து கேட்கப்படும்:கணிதம், அறிவியல், ஆங்கிலம், இந்திய வரலாறு, புவியியல், இந்திய பொருளாதாரம், இந்திய அரசியலமைப்பு, பொது அறிவு,
நடப்பு நிகழ்வுகள் ஆகிய பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.